செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:35 IST)

ஆசிரியையை கழுத்தறுத்து கொன்ற ஆசிரியர்! – தானாக சென்று சரண்!

புதுச்சேரியில் பள்ளி ஆசிரியையின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசிரியர் தாமாக சென்று போலீஸில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்தவர் விஜயன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு தனியார் பள்ளியில் பணிபுரியும் சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டில் இருந்த நிலையில் தேவைப்பட்டால் அவ்வபோது பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே தனது மனைவியின் நடத்தையில் விஜயன் சந்தேகம் கொண்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் மகனும், மகளும் இல்லாதபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜயன் தனது மனைவியை கை, கால்களை கட்டிப்போட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுள்ளார். பிறகு தானாகவே சென்று போலீஸில் சரண் அடைந்துள்ளார்.
அவரை கொரோனா பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சாந்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.