1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (13:01 IST)

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர்; விஷம் அருந்திய மனைவி; கள்ளக்காதலன் தற்கொலை

நெல்லை மாவட்டம் அருகே கணவன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவி மற்றும் அவரது காதலன் விஷம் அருத்தியதில் காதலன் உயிரிழந்தார்.


 

 
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கலா(29) ஆகியவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
 
மணிகண்டன் மனைவி கலாவுக்கும் அவரது நண்பன் குருமூர்த்திக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தெரியவந்ததும், மணிகண்டன் இருவரையும் கண்டித்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன் இருவரும் ஊரை விட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்தனர். பின்னர் இதுகுறித்து மணிகண்டன் காவல் துறையில் புகார் அளித்து, கவல் துறையினர் அவர்களை மீட்டு அறிவுரை கூறி கலாவை, அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். 
 
இருப்பினும் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர், இதற்கு மணிகண்டன் மறுபடியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சேர்ந்து வாழ முடியவில்லையே என்று நினைத்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து, விஷமருந்தியுள்ளனர். உயிருக்குப் போராடிய அவர்களை, சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் மருத்துவமனை செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தார். கலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.