1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (15:41 IST)

பெண்களை தாக்கிய டிஎஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்களை தாக்கிய டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கும் பணிகள் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 
இதில் பல ஆண்களின் மண்டை உடைந்தது. போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தாக்கினார். இந்த வீடியோ காட்சி நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களை தாக்கியது குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் விளக்கம் அளிக்க வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் போராட்டத்தில் தடியடி நடத்தியது குறித்து தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.