100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
தமிழக அரசு இலவசமாக அறிவிக்கப்பட்ட 100 யூனிட்டுகளுக்கு மேல், நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் 80 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் மே 23 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே அந்த தேதிக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் அந்த சலுகை பொருந்தும்.
100 யூனிட் வரை நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நீங்கள் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அதற்கு மேல் பயன்படுத்துவோர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த இலவச மின்சார அறிவிப்பு ஏமாற்று வேலை என்று பாமக நிறுவனர் கூட சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். எனவே இதுபற்றி பொதுமக்களுக்கு ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது.
எனவே, 100 யூனிட்டுக்கு மேல் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யூனிட் |
கட்டணம். ரூ. |
110 |
35 |
120 |
50 |
130 |
65 |
140 |
80 |
150 |
95 |
160 |
110 |
170 |
125 |
180 |
140 |
190 |
155 |
200 |
170 |
210 |
260 |
220 |
290 |
230 |
320 |
240 |
350 |
250 |
380 |
260 |
410 |
270 |
440 |
280 |
470 |
290 |
500 |
300 |
530 |
450 |
980 |
500 |
1130 |
650 |
2770 |
800 |
3760 |
950 |
4750 |
1000 |
5080 |
1050 |
5410 |
1100 |
5740 |