கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா கைப்பற்றியது எப்படி?: முன்னாள் உரிமையாளர் அதிர்ச்சி தகவல்!
கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா கைப்பற்றியது எப்படி?: முன்னாள் உரிமையாளர் அதிர்ச்சி தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் குறித்து அதிர்ச்சி தகவலை அதன் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான பீற்றர் ஜான்ஸ் கூறியுள்ளார். அதில் அவர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் செங்கோட்டையன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
தற்போதைய ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டை லண்டனை பூர்வீகமாக கொண்ட வில்லியம் ஜான்ஸ் என்பவர் 1975-ஆம் ஆண்டு முதலில் விலைக்கு வாங்கினார். அதில் 1990-ஆம் ஆண்டு முதல் தேயிலை பயிரிடப்பட்டு அதனை ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டி வந்தார்.
ஆனால் 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரான பின்னர் அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம் ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை விரும்புவதாகவும், விலைக்கு கேட்பதாகவும் வில்லியம் ஜான்ஸ்-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. 906 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த எஸ்டேட்டை விற்க அதன் உரிமையாளருக்கு விருப்பம் இல்லை.
இந்நிலையில் வங்கிகள் மூலம் கடன் வாங்கியிருந்த வில்லியம் ஜான்ஸ்-க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜான்ஸ் கொடநாடு எஸ்டேட்டை விற்க முன்வந்தார். இந்த எஸ்டேட் விற்பனை பேரம் 2 ஆண்டுகள் நீடித்ததாகவும், இதற்காக ஜெயலலிதாவும், சசிகலாவும் அவரை 6 முறை சந்தித்ததாக கூறியுள்ளார் ஜான்ஸ் கூறியுள்ளார்.
இறுதியாக 1994-ஆம் ஆண்டு 906 ஏக்கர் கொண்ட பல கோடிகள் விறபனை ஆகவேண்டிய கொடநாடு எஸ்டேட்டை வெறும் 7.6 கோடிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் கைப்பற்றியதாக ஜான்ஸ் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அடியாட்கள் மூலம் தன்னை மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார் ஜான்ஸ். மேலும் சசிகலா மற்றும் தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அடியாட்கள் தான் தன்னை மிரட்டி பணிய வைத்ததாக ஜான்ஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.