1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (12:42 IST)

வயிறு, தொண்டையில் டியூப்?: திமுக தலைவர் கருணாநிதி இப்போது எப்படி இருக்கிறார்!

வயிறு, தொண்டையில் டியூப்?: திமுக தலைவர் கருணாநிதி இப்போது எப்படி இருக்கிறார்!

நேற்று முன்தினம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க திமுக தலைவர் கருணாநிதி வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசி வரை கருணாநிதி வாக்களிக்க வரவில்லை.


 
 
திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருகிறார் என முதலில் திமுக தரப்பில் இருந்து தான் தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த ஊடகமும் கோபாலபுரத்தில் குவிந்தது. ஆனால் கருணாநிதியின் தற்போதைய உடல்நிலையால் அவரால் வீட்டை விட்டே வெளியே வர முடியாது. இதன் காரணமாக அவர் வாக்களிக்க வரவில்லை.
 
திமுக தலைவர் கருணாநிதி உணவு எடுத்துக் கொள்வதற்காக வயிற்றில் டியூப் செலுத்தப்பட்டு அதன் வழியாக அவருக்கு திரவ உணவுகள் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் செயல்பாடு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் அவரது சுவாசத்துக்காக தொண்டையிலும் ஒரு டியூப் பொருத்தப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் தனது கையெழுத்தை போட முயற்சித்த கருணாநிதி மு.க என எழுதியுள்ளார். ஆனால் அவரது வழக்கமான கையெழுத்தை விட அது மாறுபட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.