1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (08:48 IST)

ராம்குமாரின் சகோதரி ஆவேசம்: எங்களை எப்படி போட்டோ எடுக்கலாம்?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் தான் கொலையாளி என காவல் துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர்.


 
 
ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது தங்கை மற்றும் தாயை கைது செய்தனர். அப்போது அவர்களை புகைப்படம் எடுத்தனர். இதில் முகத்தை காட்ட விருப்பமில்லாமல் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தார் அவரது தங்கை மதுபாலா.
 
இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அவரது தாய் மற்றும் தங்கையை புகைப்படம் எடுத்து அதனை ஊடகங்களில் காண்பிக்க அவசியம் என்ன என்ற கேள்விகளும் எழுந்தன.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ராம்குமாரின் தங்கை மதுபாலா, ராம்குமார் இந்த கொலையை செய்திருக்கமாட்டான் எனவும், யாரையோ காப்பாற்ற தனது அண்ணனை கைது செய்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
 
மேலும் ராம்குமார் தான் கொலை செய்தவன் என உறுதி செய்யப்படாத நிலையில் எங்களை எப்படி போட்டோ எடுக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.