1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (03:55 IST)

விடுதி மாணவர்கள் புது பாணி போராட்டம் - பெட்டி படுக்கைகள் வீதிக்கு வந்தன

விடுதியில் சரியான வசதிகள் இல்லாததை கண்டித்து, விடுதி மாணவர்கள் பெட்டி படுக்கைகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
 

 
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விடுதியில் ஆதிதிராவிட மாணவர்கள் 55க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படிக்கிறார்கள். இங்குள்ள குடிநீர் பம்பு அடிக்கடி பழுது ஏற்படுகிறது. உணவும் முறையாக வழங்குவதில்லை. இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
 
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் தங்களுடைய பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு விடுதி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்து ஆதிதிராவிட நலத்துறை உதவி பொறியாளர் மலர்விழி, கோட்டாட்சியரின் உதவியாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அப்போது, 20 நாட்களில் புதிய போர் அமைத்து குடிநீர் பிரச்சனை தீக்கப்படும் என்றும், உணவும் தரமாக முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டனர்.