5 வயது சிறுமியிடம் சில்மிஷம் - வீட்டு உரிமையாளர் கைது
சென்னையில் 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த கண்ணபிரான் தெருவைச் சேர்ந்த 5 வயது சிறுமி [குமாரி -பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுமியிடம், வீட்டின் உரிமையாளரான எரோன் மோசஸ் (58) என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். மகள் அழுவதைக் கண்டு, தனது பெற்றோர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர், நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எரோன் மோசசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.