இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை : கோவையில் பதட்டம்
இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை : கோவையில் பதட்டம்
இந்து முன்னணி பிரமுகர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணியின் கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சசிக்குமார். இவர் நேற்று, அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கையில், 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்தது.
இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவரை, பொதுமக்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
இந்த தகவலை அறிந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், அந்த மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது சசிகுமாரின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சசிகுமரின் கொலை கண்டித்து, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் கடைகளை மூடச்சொல்லி இந்து முன்னணி இயக்க அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பேருந்து நிலையம், மார்கெட் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி இருக்கிறது. அதனால் அங்கு அறிவிக்கப்படாத பந்த் போல் காணப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை, இந்து முன்னணி அமைப்பினர் சேதப்படுத்தினர். இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.