3-வது நாளாக உயர்ந்துள்ள பெட்ரோல் விலை!!!

Last Modified சனி, 16 மார்ச் 2019 (08:32 IST)
பெட்ரோல் விலை தொடர்ச்சியாக 3வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது.  இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பின்னர் படிப்படியாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலை 8 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.43 ஆகவும், டீசல் விலை 8 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.96 காசுகளாகவும் விற்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :