1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (04:25 IST)

கனமழை பாதிப்புகள்; மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை தர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு கனமழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், மழையால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக  கட்சி தொண்டர்கள் எனது வேண்டுகோளை ஏற்று பல இடங்களில் நிவாரணப்பணியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் சென்னையில் தினமும் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு அளித்து உதவி செய்துள்ளனர்.
 
வீராணம் ஒழுங்காக தூர் வாரப்பட்டிருந்தால் கடலூர் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்காது என்கிறார்கள். அப்படியென்றால் ஒதுக்கப்பட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வியே எழுகிறது.
 
சென்னை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டி சென்னை மேயர் சைதை துரைசாமி  செயல்படாமல் போனது ஏன்? செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தொடர வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
 
சென்னையில் உதாரணமாக கூவம் தூர் வாரப்பட்டிருந்தால், சுத்தம் செய்யப்பட்டிருந்தால் இன்று அதிக மழையைத் தாங்கும் ஆறாகவும், மக்களுக்கு ஆறுதலாகவும் இருந்திருக்கும்.
 
மழையினால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னர. எனழே, மழையால் பாழாகி போன புத்தகங்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ உதவி செய்யவும் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட முன்வர வேண்டும்.
 
மேலும், தமிழக பாஜக சார்பில் மழை பாதிப்புகளை முழுவம் கண்டறிந்து,  விரிவான அறிக்கை மத்திய தலைமைக்கு அனுப்பியுள்ளேன். இரண்டு நாட்களில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வருகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவர்கள். மத்திய அரசு மூலம் தேவையான உதவிகளை செய்ய உதவியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.