1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (21:14 IST)

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை - வெள்ள அபாயம் ஏற்படுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தீவிரமடைந்து கனமழை பெய்தது.
 

 
இதனையொட்டி கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது.
 
பலத்த மழையின் காரணமாகவும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் புதன்கிழமை வரை 204 பேர் மழைக்கு இறந்துள்ளனர்.
 
இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 55 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரும் இறந்துள்ளனர்.
 
சென்னையில் இதுவரை மழையின் காரணமாக 34 பேர் இறந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
 
ஏற்கனவே, பழத்த மழை காரணமாக செம்பரப்பாக்கம், புழல், வீராணம் ஏரிகள் நிறைந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று இதே போன்று தொடர்ந்து மழை பெய்தால் என்னாகுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.