1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in chennai

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளம்!

rain
கடந்த சில நாட்களாக சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் நீர் தேங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை மயிலாப்பூர் மந்தைவெளி கோடம்பாக்கம் ராஜா அண்ணாமலைபுரம் பட்டினம்பாக்கம் அபிராமபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது 
 
அதேபோல் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை, தி நகர் பாண்டிபஜார் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதேபோல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து: பிரியங்கா காந்தி