இன்னும் சில மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.