இன்னும் 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை: வானிலை அறிவிப்பு..!
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 14 மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் தமிழகத்தில் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், தஞ்சாவூர், மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by siva