1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Forecast for 13 Districts in Tamil Nadua

இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், குறிப்பாக சென்னை உள்பட சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கண்ட 13 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வால் சேலம் மாணவி தற்கொலை: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்..!