செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (12:07 IST)

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chennai Rain
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதை அடுத்து இன்று முதல் ஜூன் மூன்றாம் தேதி வரை சில இடங்களிலும்,  ஜூன் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று முதல் மூன்றாம் தேதி வரை குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Mahendran