1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:33 IST)

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை.. ஆனா முன்ன மாதிரி இருக்காது! – தமிழ்நாடு வெதர்மேன்!

Chennai Rain
தென் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



கடந்த மாதத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் அதிகனமழை என்று மழை அதிகமாக பெய்தது. அதற்கு பிறகு இடைப்பட்ட காலங்களில் குறைவான அளவில் மழை பெய்து வந்த போதிலும் தற்போது பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார். டிசம்பரி பெய்தது போல அதி கனமழை இருக்காது என்றும், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K