பாழா போன புயலால வந்தது... தமிழகத்தில் வெப்பம் கொளுத்துமாம்!!
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததை தொடர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இதனைத்தொடர்ந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது, ஆனால் புயல் விலகி செல்வதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். தற்போதைய தகவலின் படி வட தமிழகத்தில் 2 - 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.