வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (20:36 IST)

150 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசிய தந்தை !

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது இரண்டு குழந்தைகளையும், 150 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த தந்தை சிரஞ்சீவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே செம்மேடு சீக்குப் பாறை என்ற பகுதியில் சிரஞ்சீவி என்பவர் தனது  குழந்தைகளான ஸ்ரீராஜ்(8) மற்றும் மகள் கவியரசி (5)இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வியூபாயிண்ட் பகுதியில் இருந்து 150 அடி பள்ளத்தில் 2 குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். 
 
அவருக்கு வீட்டில் தனது மனைவியுடன் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.