1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (16:46 IST)

பாசம் பொழியும் பருந்து; உயிரை காப்பாற்றியவருடன் தினமும் சந்திப்பு

பொள்ளாச்சி அருகில் பருந்து ஒன்று தனது உயிரை காப்பாற்றியவரை தினமும் வீட்டுக்குச் சென்று சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.



 

 
பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் கள் இறக்கும் தொழிலாளர். இவர் 5 மாதங்களுக்கு முன் கள் இறக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு காலில் அடிப்பட்ட நிலையில் பறக்க முடியாமல் இருந்துள்ளது.
 
அதை அவர் தனது வீட்டுக்குச் சென்று அந்த பருந்துக்கு வைத்தியம் செய்துள்ளார். 3 மாதம் அந்த பருந்து அவர் வீட்டில் இருந்துள்ளது. குணமான பின் பறந்து சென்றுள்ளது. இதையடுத்து தினமும் காலை, அந்த பருந்து அனில்குமார் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. 
 
இதுகுறித்து அனில்குமார் கூறியதாவது:-
 
பருந்துக்காகவே மீன், கோழி, இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை அதிகாலை கடைக்கு சென்று வாங்கி வைத்துவிடுவேன். நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அருகிலிருக்கும் மரத்தில் எனக்காக காத்திருக்கும். 
 
என் மீது பருந்து உட்காரும் போது, அது எந்த அளவிற்கு என் மீது பாசம் வைத்துள்ளது என்பதை உணருகிறேன், என்றார்.