வரும் 20ம் தேதி முதல் பலத்த மழை வாய்ப்பு

bala| Last Modified திங்கள், 16 ஜனவரி 2017 (17:59 IST)
தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செனனை வானிலை  மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியபோது, அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அளவு? எத்தனை நாள் ம்ழை நீடிக்கும் என்பது குறித்து 17ம்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமி்ழ்நாடு தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து முகநூலில், ஜனவரி 20ம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை அளவு 100 மி.மீ வரை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :