1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:59 IST)

கட்சியில் அக்கா பாடு திண்டாட்டம்தான்... தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

தமிழிசைக்கு பின்னர் அடுத்த பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தற்போதைய தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பதவிக்கு வந்து 5 வருடங்கள் ஆகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகிவிட்டதால், அந்த பொறுப்பு தமிழிசைக்கு போனது.
 
இந்நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், நடிகர் எஸ்.வி.சேகர், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. 
எச்.ராஜாவுக்கு கட்சிக்குள் தனி ஆதரவாளர்கள் உள்ளனர், அதோடு அவர் பதவி வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் நாசூக்காக தெரிவித்தும் உள்ளார். முக்கியமாக எச்.ராஜா திடாவிட கட்சிகளுக்கு எதிராகவும், மத மற்றும் இன ரீதியான உணர்வுகளை பற்றியும் அதிகம் பேசுவதால் இவரை தலைவராக்கலாம் என தெரிகிறது. 
 
ஆனால், அப்ப்டி இவர் தலைவராக்கப்பட்டால் தமிழிசை ஓரம்கட்டப்படுவார் என்றே தெரிகிறது. ஏனெனில் ஒரே கட்சியில் இருந்தாலும் எச்.ராஜா மற்றும் தமிழிசைக்கு இடையே புரிதல் இல்லை என தெரிகிறது.