கிரிக்கெட் அணிக்கு பாடல் இசை : விளம்பர தூதராக வரும் ஜி வி பிரகாஷ்.
பிரபல இசை அமைப்பாளரும் , நடிகருமான ஜி வி பிரகாஷுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அபரிதமான அன்பு இருப்பதை அனைவரும் அறிவர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் TuTi Patriots அணியை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தீம் பாடல் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ளது. அவரே இந்த அணியின் விளம்பர தூதுவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
'கிரிக்கெட்டும் இசையும் என் வாழ்வில் இன்றி அமையாத ஒன்று. கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு தனி நபராக தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்து வரும் இந்த முயற்சிக்கு என் பாராட்டுகள். TUTI Patriots அணிக்கு என் பாடல் புத்துணர்ச்சி தந்து சாதனைகள் புரிய உதவும் என நம்புகிறேன் என்றார் ஜி வி பிரகாஷ்.
'ஜி வி பிரகாஷுடன் இணைந்து இருப்பது எங்கள் அணிக்கு மிக மிக பெருமை.' நம்ம பயலுவ 'என்ற அடை மொழி எங்கள் அணிக்கு உரித்தாகும்.அந்த அடை மொழியின் அடிப்படையில் உருவாகும் இந்த ஆல்பம் ரசிகர்களை நிச்சயம் கவரும். இந்த மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் இந்த ஆல்பம் வெளி வரும்' என்கிறார் ஆல்பர்ட் திரை அரங்கின் உரிமையாளரும், TUTI Patriots அணியின் உரிமையாளருமான முரளிதரன்.