1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (13:47 IST)

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்: பரபரப்பு தகவல்

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் அந்த சேனலின் உள்ள அனைத்து வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது ஏற்கனவே ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக ஊடகங்களின் தலைப்பு செய்தியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது