மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி-யால் தமிழக அரசு கொண்டு வந்த அம்மா உணவகத்திலேயும் விலை உயர்வு ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இதுபற்றி மாநில அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை என்பதால், எனவே, எந்தெந்த பொருள்கள் விலை உயரும், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பது பற்றி பொதுமக்களிடையே குழப்பம் நீடிக்கிறது.
மக்கள் உபயோகிக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி படி சிறிய உணவகங்களுக்கு 5 சதவீத வரியும், நட்சத்திர ஹோட்டல்களுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கொண்டு வந்த அம்மா உணவகத்திலும் விலை உயர்வை ஏற்படுத்தும் என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏனெனில், வரி விதிப்பின் காரணமாக பொருட்களின் விலை உயரலாம். இதனால் அம்மா உணவகத்திலும் விலை ஏற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் தமிழக அரசு இதை எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.