1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gst commission sent summon to tvk candidate

600 கோடி மோசடி!.. தவெக வேட்பாளருக்கு சம்மன்!.. விஜய்க்கு சிக்கல்!...

tvk
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு தனித்து போட்டியிடுகிறது.. சமீபத்தில்தான் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை விஜய் அறிவித்தார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள் ஒரே நாளில் தவெகவுக்கு தாவி சீட் பெற்றார்கள்.. மேலும் தவெகவில் டீட் வாங்கியவர்கள் பலரும் அதிமுக, திமுக போன்ற கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என பலரும் பேசினார்கள்..

ஒரு பக்கம் கஞ்சா வழக்கில் சிக்கியவர்கள், பெண் பாலியல் பலாத்காரம் செய்து சிறைக்கு சென்றவர்கள் ஆகியோருக்கும் தவெகவில் சீட் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியிருக்கிறது..

140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்கு 600 கோடி வரை இழப்பை ஏற்படுத்திய புகாரில் ஜூனைத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார்.. அவரின் செல்போன்களை ஆய்வு செய்ததில் அந்த மோசடியில் சையது புர்ஹானுதீனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. 4 முறை சம்மன் அனுப்பியும் சையது ஆஜராகாததால் தற்போது 5வது முறை அவருக்கு சம்பந்தம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...