1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (06:58 IST)

பேராசையும் கோழைத்தனமும் வஞ்சித்துவிட்டது. நடிகை கவுதமி

நேற்று தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கூத்தை அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன், அரவிந்தசாமி, சித்தார்த் ஆகியோர் கூறிய கருத்துக்களை பார்த்தோம்.



இந்நிலையில் நடிகை கவுதமி தனது டுவிட்டரில் இந்த வாக்கெடுப்பு குறித்து காட்டமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். 'பேராசையும் கோழைத்தனமும் இன்று தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டதே' என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதேபோல் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு இதுகுறித்து கூறியபோது, 'எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கூறுவது ஜனநாயகமா' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 'இப்போது மிக்சர் சாப்பிட்டு கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே' என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.