1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (12:31 IST)

கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை ஃபெல்லோ திட்டம்!

Ad
சென்னை, 20 பிப்ரவரி 2024 – இந்நாட்டில் மேலாண்மை துறையில் முதன்மையான உயர் கல்வி நிறுவனமாக புகழ்பெற்றிருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், சென்னை, கல்வி சார்ந்த ஆராய்ச்சியில் சிறந்து விளங்க தேவைப்படும் திறன்கள் மற்றும் அறிவை வழங்குவதற்கென புதுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் முனைவர் கல்வி திட்டத்தை மேலாண்மையில் ஃபெல்லோ திட்டம் (FPM) என்ற பெயரில் புதிதாக தொடங்குவதை மகிழ்ச்சியுடன் இன்று அறிவித்திருக்கிறது.


 
இக்கல்வி திட்டத்தை புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், இந்திய ரிசர்வ் வங்கியின் 19-வது ஆளுநர், ஆந்திரப்பிரதேஷ் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் தற்போதைய தலைவர் என பல்வேறு உயர் தகுதிகளை கொண்ட டாக்டர். சி ரங்கராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-ன் டீன் மற்றும் முதல்வரான டாக்டர் சுரேஷ்  ராமநாதன்  முன்னிலை வகித்தார்.

தலைமை விருந்தினர் டாக்டர். சி ரங்கராஜன் இக்கல்வி திட்ட தொடக்க நிகழ்வின்போது பேசுகையில், “அறிவு பகிர்வு அல்லது பரவலை போலவே ஆராய்ச்சியும் முக்கியமானது. ஏற்கனவே இருக்கும் அறிவு பெட்டகத்தின் வழியாக பகிரப்படும் அறிவார்ந்த கல்வியினால் மட்டுமின்றி புதிய அறிவை உருவாக்குகிற மற்றும் வளர்க்கிற திறனை கொண்டும் ஒரு கல்வி நிறுவனம் சிறப்பாக அங்கீகாரம் பெறுகிறது. இந்த இலக்கை நோக்கி ஒரு உறுதியான முன்னேற்ற நடவடிக்கையை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், சென்னை எடுத்து வைத்திருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

உலக தரநிலைகளுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டிருக்கும் FPM, கிரேட் லேக்ஸ்-ன் சிறப்பான கல்வியாளர்களது வழிகாட்டலுடன் தனிச்சிறப்பான கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது; யுஎஸ் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த முன்னணி சர்வதேச கல்வியாளர்களது ஆற்றுப்படுத்தல் ஆதரவும் இம்மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது இக்கல்வி திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். உயர்தர ஆராய்ச்சி மீது சிறப்பு கவனத்துடன் முன்னணி கல்விசார் ஆய்வு இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரித்த ஆசிரியர்களது வழிகாட்டலும் இதில் இருப்பதால், பொருளாதாரம், உளவியல் மற்றும் புள்ளிவிவரயியல் போன்ற முக்கியமான பிரிவுகளில் ஆழமான அறிவை மாணவர்கள் பெறுவார்கள்; அதே நேரத்தில்  சோதனைவழி வடிவமைப்பு, எந்திர கற்றல், பொருளாதார புள்ளியல் சார்ந்த மாதிரியாக்கல் போன்ற நவீன ஆராய்ச்சி வழிமுறைகளில் கற்றுத்தேற சிறந்த வாய்ப்பையும் இக்கல்வி திட்டம் வழங்கும்.

கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-ன் டீன் மற்றும் முதல்வரான டாக்டர் சுரேஷ்  ராமநாதன் பேசுகையில், “உலக ஆராய்ச்சி வரைபடத்தில் நமது தாய்நாடான இந்தியாவை இடம்பெற செய்வது மிக முக்கியம். உண்மையிலேயே உலகத்தரத்திலான ஒரு கல்வி திட்டத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்; சிறந்த சாதனைகள் படைத்த, உலகளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய வலையமைப்பிலிருந்து உள்ளீடுகளையும், வழிகாட்டலையும் வழங்குவதாக இக்கல்வி திட்டம் இருப்பதால் அதிக தாக்கம் ஏற்படுத்தும் சிறந்த ஆராய்ச்சிக்கு இது நிச்சயம் வழிவகுக்கும்” என்று கூறினார்.

கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், சென்னையின் ஆராய்ச்சி துறை இயக்குநரும், யூனியன் வங்கியின் இருக்கைக்கான பொருளாதாரவியல் பேராசிரியர் புரொஃபஸர் வித்யா மஹம்பரே, இப்போது தொடங்கப்பட்டுள்ள FPM கல்வி திட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். இக்கல்வி திட்டம் உருவாக்கவிருக்கும் வலுவான தாக்கம் குறித்து நம்பிக்கையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்திய அவர், “விரிவான பாடத்திட்டம் மற்றும் உலகத்தரத்திலான ஆற்றுப்படுத்தல் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கல்வி திட்டம், ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் கல்வியாளர்களுக்கு திறனதிகாரத்தை வழங்கும்; இதன் தனித்துவமான இணை-ஆற்றுப்படுத்தல்  (co-mentorship) மாதிரி, தனிப்பட்ட வழிகாட்டலையும், ஆதரவையும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உறுதி செய்யும்; தாக்கம் ஏற்படுத்தும் ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி வெற்றிகரமான மேம்பட்ட கற்பித்தல் உத்திகளை கொண்ட கல்விசார் ஆசிரியப் பணிகளுக்கும்  இவர்களை தயார் செய்யும். இந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 100% கல்வி கட்டண தள்ளுபடியையும் இத்திட்டம் வழங்குகிறது; அத்துடன் அவர்களது ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கும் மற்றும் பிற வாழ்க்கை செலவுகளுக்கும் கூடுதலாக உதவித்தொகையையும் இது வழங்குகிறது” என்று தெரிவித்தார்.

FPM கல்வி திட்டம் 2 கட்டங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டத்தை உள்ளடக்கிய 1 மற்றும் 2-வது ஆண்டுகளில் மேலாண்மை துறையின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய விரிவான பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். அதன் இறுதியில் இரு ஆராய்ச்சி ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்; இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் குழுமத்தின் மதிப்பாய்விற்கு உட்பட்டது. வலுவான ஆராய்ச்சி செயல்திட்டத்திற்கு அடித்தளத்தை அமைப்பதற்கு இந்த முதல் கட்டம் மிக முக்கியமாக உதவும்; 3-5 ஆண்டுகளை கொண்ட 2-வது காலகட்டத்தின்போது, இரண்டாவது ஆண்டின் இறுதியில் சமர்ப்பித்த ஆராய்ச்சி ஆவணத்தின் தொடர்ச்சியாக அவர்களது முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி பயணத்தில் மாணவர்கள் தொடங்குவார்கள். அவர்களது ஆராய்ச்சி தலைப்பை மேலும் சீராக்கவும், முறைசார்ந்த முன்வரைவை உருவாக்கவும் மற்றும் இறுதியில் அவர்களது ஆய்வு விளக்கவுரையை உறுதியாக சான்றுகளுடன் நிரூபிக்கவும் ஆசிரியர் குழுவின் ஆலோசகர்கள் மற்றும் இதற்கான ஒரு பிரத்யேக குழுவோடு மாணவர்கள்

 

மிக நெருக்கமாக செயலாற்றுவார்கள். இச்செயல்பாட்டின் இறுதியில் FPM என்ற முனைவர் பட்டம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கிரேட் லேக்ஸ்-ன் தலைமை இயக்க அதிகாரி மற்றும் கல்வி சேர்க்கைக்கான இயக்குநர் திரு. கௌதம் லக்கம்ராஜூ மேலும் பேசுகையில், “இந்த முனைவர் பட்டப்படிப்புக்காக, முதலாண்டில் ஆராய்ச்சிக்கு நிரூபிக்கப்பட்ட திறனை வெளிப்படுத்தியிருக்கும் 5-6 ஸ்காலர்களை தேர்வு செய்ய நாங்கள் திட்டமிடுகிறோம். போட்டித்தேர்வின் மதிப்பெண்களோடு கல்வி மற்றும் தொழில்முறை சாதனை பதிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்டிப்பான தேர்வு செயல்முறையினை சார்ந்து இந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

தி கிரேட் லேக்ஸ் வழங்கும் மேலாண்மையில் ஃபெல்லோ கல்வி திட்டம், கீழ்கண்ட முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது:  
  • விரிவான ஆராய்ச்சி அனுபவம் மற்றும் கவுரவமிக்க கல்வி ஆய்விதழ்களில் கட்டுரைகளை பிரசுரித்திருக்கிற உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
  • உலகின் பல்வேறு இடங்களை சேர்ந்த இணை ஆலோசகர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துநர்களிடமிருந்தும் வழிகாட்டலையும், நிபுணத்துவ பரிமாற்றத்தையும் மாணவர்கள் பெற்று பயனடையலாம். மேலும் அவர்களது ஆராயச்சி திறன்கைள மேம்படுத்துகிற சோதனைவழி வடிவமைப்பு, எந்திர கற்றல், பொருளாதார புள்ளியல் சார்ந்த மாதிரியாக்கல்  போன்ற நவீன ஆராய்ச்சி வழிமுறைகளிலும் மாணவர்கள் நிபுணத்துவம் பெறலாம். ஆய்வு கட்டுரைகளை பிரசுரிப்பது மீது அதிக வலியுறுத்தல் இருப்பதால் புகழ்பெற்ற கல்வியிதழ்களில் தங்கள் ஆராய்ச்சியை பிரசுரிக்க அவசியமான திறனையும், அறிவையும் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.
  • கூடுதலாக, கற்பித்தல் மீது சிறப்பு வலியுறுத்தல் இதில் இருப்பதால் திறன்மிக்க கற்பித்தல் வழிமுறைகளில் விரிவான பயிற்சியினை மாணவர்கள் பெறுவார்கள். வெற்றிகரமான கல்வி பணிகளுக்கு அவர்களை தயார் செய்ய உதவும் நேர்வு வழிமுறையும் (case method) இதில் உள்ளடங்கும்.
  • முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 50,000 என்ற உதவித்தொகையை இத்திட்டம் வழங்குகிறது. அடுத்து வரும் ஆண்டுகளுக்கு இத்தொகை அதிகரிக்கும்.
  • JRF(NET)/CAT/XAT/GMAT/GRE போன்ற போட்டித்தேர்வுகள் மற்றும் சுயவிவரக்குறிப்பு அடிப்படையிலான விரிவான மதிப்பாய்வை உள்ளடக்கிய கடுமையான சேர்க்கை செயல்முறையின் மூலம் இக்கல்வி திட்டத்திற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 
புதுமையான பாடத்திட்டம், தகுதியும் திறனும் கொண்ட ஆசிரியர்கள் தொழில்துறையுடன் வலுவான பிணைப்பு ஆகிய அம்சங்களுக்காக புகழ்பெற்றிருக்கும் கிரேட் லேக்ஸ் சமூக ரீதியில் பொறுப்புள்ள பிசினஸ் தலைவர்களை உருவாக்குவது மற்றும் கல்விசார் நேர்த்தி மற்றும் ஆராய்ச்சி கலாச்சாரத்தை பேணி வளர்ப்பது என்ற குறிக்கோளை கொண்டிருக்கிறது. சிறப்பான கல்வி பின்புலம் மற்றும் ஆராய்ச்சி மீது உண்மையான அர்ப்பணிப்பு கொண்டுள்ள நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கிரேட் லேக்ஸ் சென்னை FPM கல்வி திட்டம் வழங்குகிறது. மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் அறிவின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த கல்வி திட்டமாக இருக்கும். கூடுதலாக, கல்வி சார்ந்த பணிகளுக்கு மாற விரும்பும்  தொழில்முறை பணியாளர்களது விருப்பங்களையும் இது பூர்த்தி செய்யும்; பிசினஸ் கல்வியின் எதிர்காலத்தின் மீது நிலைத்து நிற்கும் தடங்களை பதிக்க விரும்புவோர்களுக்கு ஒரு நல்ல தளத்தினை இத்திட்டம் வழங்கும்.

கிரேட் லேக்ஸ் சென்னை FPM கல்வி திட்டத்திற்கான விண்ணப்பங்களை இப்போது பெறலாம். இதில் சேர்வதற்கான உங்கள் பயணத்தை தொடங்க காணவும்: https://www.greatlakes.edu.in/chennai/fpm

சேர்க்கை தொடர்பான விசாரணைகளுக்கு [email protected] என்பதில் தொடர்பு கொள்ளவும் அல்லது +91 78240 11333 என்ற எண்ணை அழைக்கவும்.