1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Governor Tamilisai's mother dies

கவர்னர் தமிழிசையின் தாயார் மரணம்- கமல் இரங்கல்

கமல் இரங்கல்
தமிழகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் இலக்கியவாதியுமான குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும் தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி. கிருஷ்ணகுமாரி இன்று மறைந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவிட்டுள்ளார்.

அதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஐயா குமரி அனந்தனின் மனைவியும் தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி.கிருஷ்ணகுமாரி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸை சந்தித்த ராகுல்காந்தி!