1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2017 (21:44 IST)

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர்

தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை சந்தித்த பிறகு தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.


 


தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். இருவரும் அவர்களது தரப்பு கருத்து மற்றும் கோரிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் சந்தித்த பிறகு ஆளுநர், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.