1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 7 ஜனவரி 2017 (11:26 IST)

சசிகலா முதலமைச்சர் ; கவர்னர் மவுனம் : கலக்கத்தில் கார்டன்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல் அமைச்சராக பதவி ஏற்பது குறித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட தகவலுக்கு, அங்கிருந்து எந்த பதிலும் வராதது சசிகலா குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரின் கீழ் செயல்படும்  புதிய அமைச்சரவை கூட தயாராகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா உரையாடி வருகிறார். இந்த கூட்டம் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. அதன் பின் ஜனவரி 12ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான தேதி குறித்து ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதாம். ஆனால் அங்கிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. 
 
சசிகலா முதல் அமைச்சர் பதவியில் அமர்வதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை எனவும், அதனால்தான் இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனவும் தெரிகிறது.