1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (10:54 IST)

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது.   
 
சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.54 குறைந்து, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,700 ஆக இருக்கிறது. இதனால் ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்கப்படுகிறது. இதன்படி சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது.