புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:50 IST)

தீப திருவிழாவுக்கு துணிப்பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு !

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்கள் கையில் துணிப் பை, சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்கம் பரிசு அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :
 
தீப திருவிழாவுக்காக சுற்றுச் சுழலுக்கு உகந்த வகையில் துணிப்பை சணல் பை கொண்டு வருமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
அப்படி துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.