வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (11:38 IST)

ஜிகே மணியின் மகன் திடீர் விலகல்.. பாமகவில் பரபரப்பு!

gkm tamilkumaran
ஜிகே மணியின் மகன் திடீர் விலகல்.. பாமகவில் பரபரப்பு!
முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்த நிலையில் அந்த பதவியை அவர் சற்று முன்னர் ராஜினாமா செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜேகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
 
பெரு மதிப்பிற்குமுரிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமன கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran