திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2023 (14:54 IST)

அதிமுக, பாஜக இரு கட்சிகளிடமும் நட்புடன் இருக்கிறோம்: தமாகா தலைவர் வாசன் பேட்டி..!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எந்த கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அதிமுக, பாஜக இரு கட்சிகளிடமும் நட்புடன் இருக்கிறோம் என தமாகா தலைவர் வாசன் பேட்டி அளித்துள்ளார். மேலும் வரும் ஜனவரி மாதம் எந்த கூட்டணியில் சேருவது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,.
 
தமாகா தலைவர் வாசன் அவர்களுக்கு அதிமுக தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்திருக்கிறது என்பதால் அவர் அதிமுக கூட்டணியில் சேரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறாது.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கூட்டணியிலும் சில மாற்றங்கள் இருக்குன் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva