செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (10:03 IST)

காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்? ஆற்றில் குதித்த ஆட்டோ டிரைவர்! – சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் காதலி வேறு ஒருவருடன் சென்று விட்டதால் ஆட்டோ டிரைவர் கூவம் ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் 49 வயதான பாலாஜி என்பவர். ஆட்டோ டிரைவராக இருந்து வரும் பாலாஜி அப்பகுதியில் சித்ரா என்ற பெண்ணுடன் பல காலமாக திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராவுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பாலாஜிக்கு தெரியாமல் அந்த நபருடன் சித்ரா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில காலமாகவே மன விரக்தியில் இருந்த பாலாஜி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் போலீஸ் பூத் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் இறந்து மிதந்த பாலாஜியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K