வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (15:00 IST)

நிலத்துக்காக 14 வயது சிறுமியை 48 வயதானவருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை

கிருஷ்ணகிரியில் 14 வயது சிறுமி முனியம்மாவை அவரது தந்தை 3 ஏக்கர் நிலத்தை வாங்கிக்கொண்டு 48 வயதான ஒருவருக்கு மூன்றாவதாக திருமணம் செய்து வைத்துள்ளார்.


 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொட்ட மஞ்சு என்ற மலைக்கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்ற விவசாயி 14 வயது சிறுமி ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே மாதப்பனுடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அவர் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
 
இந்நிலையில் மூன்றாவதாக முனியம்மா என்ற 14 வயது சிறுமியை அவரது தந்தைக்கு 3 ஏக்கர் நிலத்தை கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலை கிருஷ்ணகிரி ஒரு கிராமத்தார், மாவட்ட குழந்தைகள் குழும தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த கிராமத்துக்கு குழு ஒன்றை அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவினரின் விசாரணை அறிக்கையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது நிரூபிக்கப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.