ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (08:15 IST)

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் தான் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரம் மற்றும் நன்மைதிப்பிற்கு சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்கிடி சேலைகள், பத்தமடை பாய், சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம்,தஞ்சாவூர் ஓவியம், ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் முக்கிய பொருட்கள் ஆகும். அந்த வகையில் தற்போது மேலும் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு புவிசார் குறியீடை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 
 
திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசு வழங்கி கெளரவித்துள்ளது. தமிழகத்தின் 29 பொருட்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ள நிலையில் தற்போது திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகிய இரண்டையும் சேர்த்தால் 31ஆக் உயர்ந்துள்ளது