60 கிமீ தூரத்தில் கஜா புயல்: அதிகாலை கரையை கடக்கும் என தகவல்

gaja
Last Modified வெள்ளி, 16 நவம்பர் 2018 (00:05 IST)
தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி புயலில் வெளிப்பகுதி மட்டுமே தற்போது நிலப்பரப்பிற்கு வந்துள்ளதாகவும், இந்த புயல் முழுவதுமாக கரையை கடக்க இன்னும் ஐந்து மணி நேரம் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று அதிகாலை நாகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தஞ்சையில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், கடலூரில் பிச்சாவரம், முழுகுத்துறை, சின்னவாய்க்கால், மானம்பாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :