வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (20:48 IST)

டீக்கடை பெஞ்சுகளாக மாறிய கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள்

கடந்த மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா பகுதி வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. உயிர்ப்பலி மட்டுமின்றி கோடிக்கணக்கான மதிப்புள்ள விளை பொருட்களும், தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன. பிள்ளைகளை போல் வளர்த்த தென்னைகள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில் சாய்ந்த சில தென்னை மரங்கள் மீண்டும் உயிர்ப்பெற விவசாய விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டது. அதேபோல் பல தென்னை மரங்கள் மிஷின் உதவியால் வெட்டப்பட்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டீக்கடை பெஞ்சு. கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள் டேபிள், பெஞ்சுகளாக வடிவமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.