ஜெயலலிதாவை தி.மு.க. எதிர்த்ததே தவிர துரோகம் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது கடந்த நான்கு நாட்களாக டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று முதல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுசூதனனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். இந்நிலையில் இன்று முதல் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இன்று ஆர்.கே.நகரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கும். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷின் எளிமையைக் கண்டு மக்கள் வரவேற்கின்றனர். அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மறைத்த அ.தி.மு.க. இரண்டாக பிரிந்துள்ளது. பெரா மாஃபியா அணியும், மணல் மாஃபியா அணியும் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவை தி.மு.க. எதிர்த்ததே தவிர துரோகம் செய்யவில்லை.
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் டி.டி.வி. தினகரன். பண மோசடியில் ஈடுபட்டதால், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் பன்னீர்செல்வம். நான் கருணாநிதியின் மகன் என்பதால், எதையும் ஆதாரத்துடனே பேசுவேன்" என்று கூறினார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்