1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 டிசம்பர் 2022 (15:34 IST)

மூத்த குடிமகன்களுக்குஇலவச பேருந்து பயண டோக்கன்கள் எப்போது? -போக்குவரத்துறை அறிவிப்பு

Chennai Bus
சென்னை மா நகர பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு வரும்  டிசம்பர் 21 ஆம் தேதி  முதல் இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதலவர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னையில், 4 பணிமனை பேருந்து நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு மாதம் 10 டோக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2023 ஜனவரி முதல் ஜூன் வரை இலவச பேருந்து பயண டோக்கன் வரும் டிசம்பர் 21 முதல் வி நியோகம் செய்யப்படும் என்றும் இதை, திருவான்மியூர், அடையாறு மந்தைவெளி,  தி நகர் மற்றும் சைதாப்பேட்டையில்  இந்த டோக்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

Edited By Sinoj