1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (12:09 IST)

ரூ.70 லட்சம் புகாரில் சிக்கிய பாரிவேந்தர்

ரூ.70 லட்சம் புகாரில் சிக்கிய பாரிவேந்தர்

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், பாரிவேந்தர் என்னிடம் ரூ. 70 லட்சம் கடனாகப் பெற்றார். அதற்கு ஈடாக ரூபாய் 35 கோடி மதிப்புள்ள அவருக்குச் சொந்தமான 5 சொத்துக்களின் பத்திரங்களை கொடுத்துள்ளார்.
 
கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை, கடனுக்கு வட்டியையும் கொடுக்கவில்லை. இது குறித்து அவரிடம் நேரில் பேச மறுக்கிறார்.
 
எனவே, அவர் என்னிடம் பெற்ற கடனை திருப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.