கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினார்கள்: நீதிமன்றத்தில் கணபதி திடுக் வாக்குமூலம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது 'ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கட்டாயப்படுத்தி தன்னிடம் காவல் துறையினர் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக நீதிமன்றத்தில் கணபதி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். மேலும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்று பணி வழங்கியதாக தன்னிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், ஆனால் அதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் முறையீடு செய்துள்ளார்.
கணபதியின் முறையீட்டை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜான் வினோ, கணபதி மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும் வரும் மார்ச் 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அன்றைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது.