1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (12:04 IST)

நீதிபதி எச்சரித்தும் ஆஜராகாத முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்: அடுத்த நடவடிக்கை என்ன?

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை.  எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாம வரும் 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த வழக்கில், ராஜேஷ்தாஸுக்கு ஆதரவாக அவரது வக்கீல்கள் வாதாடினர். ஆனால், ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகாததால், அவரது வாதம் கேட்கப்படவில்லை. இதையடுத்து, வழக்கை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
 
ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை என்றால்,  பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
Edited by Siva