ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (10:10 IST)

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம் என சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
அஜித் அரசியலுக்கு வந்தால் அதை விரும்புவீர்களா என்ற கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெயகுமார், ‘ நல்லது செய்வதற்காக பரந்த களம் என்பதுதான் அரசியல் என்றும் அப்படிப்பட்ட அரசியல் களத்திற்கு அஜித் குமார் வந்தால் கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம் என்றும் தெரிவித்தார் 
 
அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்ற நிலையில் அவரை அரசியலுக்கு பல அரசியல்வாதிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கே வராத நிலையில் அரசியலுக்கு எப்படி வருவார் என்று அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 
 
Edited by Mahendran