1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (23:20 IST)

முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்

முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்

முன்னாள் காவல்துறை இயக்குனர் ஆர்.நடராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
சென்னை மாநகர காவல்துறை ஆணையர், சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபி, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆகிய பதிவிகள் வகித்தவர் ஆர்.நடராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
 
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆர்.நடராஜ், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்தது தொடர்பாகவும், நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.நடராஜ் முன்னாள் காவல்துறை இயக்குனர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
 
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.