திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:55 IST)

சென்னையில் கனமழை எதிரொலி: தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

Flights
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாக தகவல் வெளியாகி உள்ளன
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது
 
குறிப்பாக மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக விமான ஊழியர்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவது தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக துபாய், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாகவும், அதேபோல் மும்பை கொல்கத்தா மதுரை திருச்சி டு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து கிளம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கி உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran